--- --:--:-- --

பாட்டு பாடி சண்டையை தீர்த்த பாண்டியராஜன்!

9.1

ஆவடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் மேடையிலேயே அமைச்சர் பாண்டியராஜனுடன் மற்றொரு நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் அமைச்சரின் ஆதரவாளரை முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீமின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

அதற்கு பதிலடியாக நேற்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரஹீமின் ஆதரவாளரை அமைச்சர் பாண்டியராஜன் ஆதரவாளன் தாக்க முயன்றதாக செல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் ஒருவர் மேடையிலிருந்த அமைச்சர் பாண்டியராஜனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் எம்ஜிஆர் பாடல் பாடி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon