--- --:--:-- --

விஜயலக்ஷ்மி பற்றிய கேள்வியே கேவலமானது ….! சீமான் காட்டம்!

4

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூற சென்றபோது கெடாத சட்ட ஒழுங்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராக செல்லும்போது மட்டும் கெட்டுவிடுமா என்று நடிகர் ரஜினிகாந்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அந்த கட்சியின் இணையதள பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் அவர் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளிக்க மறுத்த சீமான் கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்க முடியும் என்றும் கேவலமானவற்றிற்கு பதிலளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon