--- --:--:-- --

விஜய் ரஜினியே வரும் போது திரிஷாவுக்கு என்ன வேலை?..எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்!

3

சினிமா விழாக்கள் விஜய்க்கு அரசியல் மேடையாக இருந்தாலும் எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளக்கூடாது என்பது அஜித்தின் கொள்கை. அஜித்தின் கொள்கையை தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும், அவரோடு திரிஷாவும் கடைபிடிக்கிறார்கள். 24 ஹவர்ஸ் தட்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்கத்தில் நடிகை திரிஷா நடித்துள்ள ” பரமபத விளையாட்டு” திரைப்படத்தின் அறிமுக விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது.

 

விழாவில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் உச்ச நடிகர்களாக ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் திரைப்பட அறிமுக விழாவிற்கு வரும் போது திரிஷா போன்ற நடிகைகள் விழாவில் பங்கேற்பதில் என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பினார்.

 

நம்மை நம்பி ஒருவர் பெரிய படமெடுத்து இருக்கும்போது கதாநாயகி திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிப்பதாகவும், இனி வரும் நிகழ்ச்சிகளில் நடிகை த்ரிஷா கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பித் தர வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார் தயாரிப்பாளர் சிவா.

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி ஆவதற்கு கதையும் தாண்டி பிரமோஷன் செய்வது அவசியமாகிறது. விழா மேடைகளில் ஃபிளாஷ்பேக் கதைகளைச் சொல்லி கண்ணீர் வடிப்பதும் பிற நடிகர்கள் குறித்து காட்டமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தும் கூட படத்திற்கு ஒருவிதமான பிரமோஷன் தான்.
இதுதவிர தனியார் தொலைக்காட்சிகளிலும், யூடியூப் சேனல்களிலும் முகத்தை காட்டி கதாநாயகனும், நாயகியும் திரைப் படத்தை பிரமோட் செய்ய வேண்டும்.

 

இப்படி கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் நடிகை நடிகைகள் புரமோஷனுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் த்ரிஷா, நயன்தாரா போன்ற உச்ச நட்சத்திரங்களை எந்த திரைப்பட விழாவிலும் காண முடிவதில்லை. நடிகர்களுக்கு ஈடாக தங்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது நடிகைகள் பலரது கோரிக்கை. ஒருவேளை அதன் எதிரொலியாக தான், த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்டோர் திரைப்படவிழாவில் கலந்து கொள்வதில்லை.

நடிகர் விஜய் உட்பட பல நடிகர்கள் மேடைகளில் அரசியல் பேசுவதன் மூலம் அவ்வப்போது தமிழ் சினிமா ட்விட்டர் டிரெண்டிகுகளை ஆக்கிரமித்து விடுகின்றன. சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக தான் அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்கள் பொது மேடைகளை தவிர்க்கின்றனவா என்ற கேள்விகள் எழாமலில்லை.

 

எது எப்படி இருந்தாலும் நம்மை நம்பி படம் தயாரிக்கும் தயாரிப்பாளரின் திருப்திக்காகவாது திரைப்பட விழாக்களில் தோன்றி ஓரிரு வார்த்தைகளை பேசிவிட்டு செல்வதே நாகரிகம் என்கின்றனர் திரைப்பட ஆர்வலர்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon