சிஏஏவினால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது
குடியுரிமை திருத்த சட்டத்தினால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் கேரள சமாஜத்தில் “அரசியலமைப்பை காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர் எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயான து என தெரிவித்தார்.
இந்திய அரசியல் சாசனப்படி எந்த சட்டமும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு வரக்கூடாது என்று கூறிய அவர் கடந்த 70 ஆண்டுகளாக கட்டிக்காத்த அரசியலமைப்பு சாசனத்தை 72 மணி நேரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசு தகர்த்து விட்டதாகவும் ப சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் என்று நம்புவதாக கூறிய அவர், சிஏஏ என்பிஆர், என் ஆர் சி ஆகியவற்றை அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




