கருப்பு கொடி ஏற்றி சி‌ஏ‌ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சேலத்தில் பல்வேறு வீடுகள், வணிக நிறுவனங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலம் கோட்டை பகுதியில் இஸ்லாமிய பெண்கள் குழந்தைகளுடன் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கைகளில் கருப்பு கொடியை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக பெண்கள் கோஷமிட்டனர். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது குறித்து கோட்டை, பாத்திமா நகர், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Leave a Reply