45,000 ரூபாய்க்கு ஏலம் போன எலுமிச்சை பழம்!
ஈரோடு மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் பூஜைக்கு வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை 45 ஆயிரம் ரூபாய்க்கு பக்தர் ஒருவர் ஏலத்தில் எடுத்தார்.
ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி அருகில் உள்ள ஸ்ரீ பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த பூஜையின் போது சுவாமிக்கு வைக்கப்பட்ட எலுமிச்சைபழம், வெள்ளிகாசு, வெள்ளிமோதிரம் உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டன.
அப்போது பக்தர் ஒருவர் 45 ஆயிரம் ரூபாய்க்கு எலுமிச்சை பழத்தை ஏலத்தில் எடுத்தார். அதேபோல் வெள்ளிக்காசு 50 ஆயிரம் ரூபாய்க்கும், வெள்ளி மோதிரம் 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




