முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 -வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் இன்று உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாகவும் தமிழக அரசு அறிவித்து முதல் முறையாக இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பிரம்மாண்டமான ரோஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு திரளாக கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளபானோர் பங்கேற்றனர்.