இரு நாள் பயணமாக இந்தியா வந்து சேர்ந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் 2 நாள் பயண நிகழ்ச்சி நிரலை மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலை 11:40 மணி: டிரம்ப், மனைவி மெலனியா, ஆமதாபாத் விமான நிலையம் வருகை. பிரதமர் மோடி வரவேற்பு
பகல் 12:15 மணி: காந்தியின் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். காந்திக்கு டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.
1:05 மணி: கடந்தாண்டு அமெரிக்காவில் நடந்த, ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி போல, குஜராத் அரசு சார்பில் உலகின் பெரிய ஆமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடக்கிறது.
3:30 மணி: தாஜ்மஹாலை காண டிரம்ப் – மெலனியா, ஆக்ரா செல்கின்றனர்.
இரவு 7:30 மணி : டில்லி ஐ.டி.சி., மயூரா ஓட்டலில் தங்குகின்றனர்.
25-ந் தேதி காலை 10:00 மணி: டில்லி ராஷ்டிரபதி பவனில், டிரம்புக்கு வரவேற்பு.
காலை 10:30 மணி: ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.
காலை11:00 மணி: டில்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில், பாதுகாப்பு, வர்த்தகம், பயங்கரவாத தடுப்பு உட்பட பல துறைகளில், இந்திய – அமெரிக்க உறவு குறித்து, பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பகல், 12:40 மணி : ஒப்பந்தங்கள் பரிமாற்றம், செய்தி வெளியீடு.
இரவு, 7:30 மணி: இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் டிரம்ப். பின்னர் இரவு விருந்தளிக்கிறார்.
இரவு, 10:00 மணி: டில்லி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார் டிரம்ப்.