இரண்டு தினங்களுக்கு முன்பு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சார்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் சேசு அலங்காரம் என்பவர் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காயம் பட்ட மீனவர் சேசுவை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி எம்பி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் தமது சொந்த நிதியில் இருந்து 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் உரிய அரசு நிவாரண உதவிகளை பெற்று தருவதாகவும் நவாஸ் கனி உறுதியளித்தார்.