முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க அமிதாப் பச்சன் ஆசப்பட்டார்

“முந்தானை முடிச்சு” படத்தில் நடிக்க நடிகர் அமிதாப் பச்சன் ஆசைப்பட்டதாக இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார். பூதமங்கலம் போஸ்ட் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

இதில் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசினார். முந்தானை முடிச்சு திரைப்படத்தை தாம் அமிதாப்பச்சனுக்கு காட்டியதாகவும். ஹிந்தியில் அந்த படத்தில் நடிக்க அவர் ஆசைப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதற்காக தனது சம்பளத்தை கூட அமிதாப் குறைந்து கொள்ள தயாராக இருந்ததாகவும் ஆனால் தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ளாததால் அந்த படத்தை எடுக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.


Leave a Reply