10ம் வகுப்பு படித்துவிட்டு 10ஆண்டுகளாக மருத்துவம்..கைதான பெண்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு 10 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். ஆனத்தூர் கிராமத்தில் வசித்து வந்த சிவ சண்முகத்தின் மனைவி மஞ்சுளா முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

அதனடிப்படையில் சிவ சண்முகத்தின் வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டதில் ஒரு அறையில் மருத்துவம் பார்த்து தெரியவந்ததை தொடர்ந்து மஞ்சுளாவை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சிவ சண்முகத்தை தேடி வருகின்றனர்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே புகாரில் மஞ்சுளா கைதாகி வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.


Leave a Reply