திருச்சியில் 28 கல்லூரி மாணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை

திருச்சியில் மோதலில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி பிராட்டி ஊரில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

 

கைகளில் கிடைத்த கற்களாலும், பீர் பாட்டீல்களாலும், உருட்டுக் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார் 28 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடைய கல்லூரி மாணவர் தரப்பில் சமரசம் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜெகதீஸ் சந்திர கல்லூரி மாணவர்களின் நலனை கருதியும் அவர்களின் எதிர்காலம் கருதியும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட்டார். எனினும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் தூய்மை பணி மேற்கொள்வதுடன் மருத்துவமனை முதல்வரிடம் சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

 

நீதிமன்ற உத்தரவின் பேரில் 26 மாணவர்கள் அரசு மருத்துவமனை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆலோசனையும், முக கவசம் மற்றும் கையுறை வழங்கப்பட்டது.


Leave a Reply