ஒவைஸி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இளம்பெண்ணால் பரபரப்பு

பெங்களூருவில் சி‌ஏ‌ஏவுக்கு எதிராக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைஸி கலந்துகொண்ட பேரணியின்போது பெண் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அரசியலமைப்பை காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த பேரணியில் ஒவைஸி மேடை ஏறிய போது பெண் ஒருவர் பாகிஸ்தான் வாழ்க என்று மைக்கை பிடித்து கோஷமிட்டார். உடனடியாக அதனை தடுக்க முற்பட்ட ஓவைசி அந்த பெண்ணிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சி செய்தார்.

 

எனினும், அந்த பெண் கை கொடுக்காது தொடர்ந்து கோஷம் எழுப்பினார். இதனையடுத்து காவலர்கள் மேடையேறி அந்த பெண்ணை கீழே இறக்கினர். அதன் பின்னர் பேசிய ஓவைசி அந்தப் பெண்ணுக்கும் தனது கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். எதிரி நாடான பாகிஸ்தானை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.


Leave a Reply