தவறான உறவை தட்டிக் கேட்ட நபர் படுகொலை
தவறான உறவை தட்டிக்கேட்ட நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிகழ்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த அழகு ராஜன் என்பவர் தான் நடத்திவரும் பெட்டிக் கடைக்கு பொருட்கள் வாங்க கழுகுமலைக்கு சென்றார்.
அங்கிருந்து வீடு திரும்பும் போது அவரை ஒருவர் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இதனை அறிந்த அழகு ராஜனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடைய கொலை செய்த இளைஞர் மகேந்திரன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அப்போது மகேந்திரன் திருமணமான பெண் ஒருவருடன் முறைதவறிய உறவு வைத்திருந்ததாகவும், அதனை தட்டிக் கேட்டதால் அழகு ராஜனை கொலை செய்திருப்பதாகவும் காவலர்கள் கூறுகின்றனர். இதனிடையே அந்த வழியாக வாகனத்தில் சென்ற தென்காசி மாவட்ட ஆட்சியரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வழிமறித்தனர்.
அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு கலைந்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




