சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய காரைக்குடியை சேர்ந்த நபருக்கு கொரானா வைரஸ் அறிகுறி தென்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக சமையல் வேலை செய்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு சளி மற்றும் இருமல் இருந்ததால் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள கொரொனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்திரனுக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவிலிருந்து மேலும் 100 இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வர இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவிஸ்க்குமார் சி17 ராணுவ விமானம் கொரொனா பரவத் தொடங்கிய உகான் நகருக்கு அனுப்பப்பட இருப்பதாக கூறியுள்ளார்.
தாயகம் திரும்ப விருப்பமுள்ளவர்கள் தூதரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும் இருப்பதாகவும் சீனா தரப்பிலிருந்து அனுமதி கிடைத்ததும் விமானம் உகான் நகரத்திற்கு விரைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே 640 இந்தியர்கள் சீனாவிலிருந்து இரு விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்துவரப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் 100 பேரை அழைத்து வர இந்தியா திட்டமிட்டுள்ளது.