படியில் நின்று பயணம்! கண்டித்த நடத்துனரை தகாத வார்த்தையில் திட்டிய மாணவர்!
திருத்தணி அருகே அரசு பேருந்தின் படியில் பயணம் செய்தவர்களை கண்டித்ததால் நடத்துனரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பள்ளி மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பேருந்தில் சோளிங்கர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர்.
அதில் சில மாணவர்கள் படியில் தொங்கியவாறு பயணம் செய்ததால் அவர்களை நடத்துனர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு மாணவர் அநாகரிகமாக நடந்து கொண்டதோடு தகாத வார்த்தைகளையும் கூறி நடத்துனரை தாக்க முயன்றுள்ளார்.
பள்ளி மாணவனின் இந்த செயல் பேருந்தில் வந்த மற்ற பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடத்துனர் மற்றும் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




