நித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய கர்நாடக நீதிமன்றம் உத்தரவு
பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் எழுந்த பாலியல் புகார் வழக்கில் நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்யானந்தாவின் கார் ஓட்டுநராக இருந்த லெனின் கருப்பன் பிடதி ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாகக் கூறி 2013ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
இவ்வழக்கு பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு பிணை வழங்கியுள்ளது. இந்நிலையில் நித்யானந்தா விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தரவில்லை என லெனின் கருப்பன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதில் பாஸ்போர்ட் காலாவதியான பிறகும் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று வருவதால் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். அதை ஏற்ற கர்நாடகா உயர்நீதிமன்றம் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்தது.
அந்த உத்தரவின் நகலை கர்நாடக சிபிசிஐடி காவல்துறையினர் ராம்நகர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து நித்யானந்தாவை உடனே கைது செய்ய பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




