நெரிசலான வீதிகள், நிரம்பி வழியும் குடிசைகள், குப்பை மேடுகள் சாக்கடை மேடு என மும்பை மக்களே மூக்கை மூடி கடந்து செல்லும் எளிய மக்களின் இருப்பிடம் தாராவி. இந்த இருபதுக்கு இருபது அறைகளில் இருந்து கிளம்பிய 28 அசுரர்கள் தான் இன்று எல்லா ஊடகத்திலும் பேசுபொருள்.
என்பிசி சேனலில் ஒளிபரப்பாகும் அமெரிக்காஸ் காட் டேலண்ட் என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியின் சாம்பியன் ஆகி அமெரிக்கர்களை வியக்க வைத்திருக்கிறார் இந்த இளைஞர்கள். பல்திறன் கொண்டவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடனம் என்ற விசிட்டிங் கார்டு என்டர் ஆன இந்த அன்பீட்டபில் பாய்ஸ் முதல் பர்ஃபாமென்ஸ் இலேயே பார்வையாளர்களை கிறுகிறுக்க வைத்தார்கள்.
காற்றில் நடனமாடும் கால்களைக் கொண்டு அந்தரத்தில் இவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் அரங்குகள் அதிர்ந்தன. விசில்கள் பறந்தன. நடுவர்கள் இருக்கை துறந்தார்கள். வெற்றி மீது அவர்கள் கொண்டிருந்த வேட்கை வெறித்தனமாக அவர்களின் நடனங்களில் வெளிப்பட்டது.
கனவுகளை கண்களில் தேக்கி வலம் வந்தவர்கள் தங்களுக்கு கிடைத்த சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி பெரும் அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ளனர். பிரபஞ்சத்தின் பிற போட்டியாளர்களை பீட் செய்து இந்த அன்பீட்டபில் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி நடனக்கலைஞர்கள் மட்டுமல்ல நாம் அனைவருமே உள்வாங்கிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் தான்.