--- --:--:-- --

பெண்ணிடமிருந்து நூதன முறையில் ரூ.44,000 கொள்ளை

15

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பெண்ணிடமிருந்து 44 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த பார்வதி என்பவர் இந்தியன் வங்கியில் இருந்து 44 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஓஎம்ஆர் சாலை வழியாக நடந்து வந்துள்ளார்.

 

அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரது முதுகில் எரிச்சலை ஏற்படுத்தும் பொடியை தூவியுள்ளனர். இதில் பார்வதிக்கு எரிச்சல் ஏற்படவே அந்த பகுதியில் உள்ள தனது கணவரின் மளிகைகடைக்கு சென்று பணப் பையை வைத்து விட்டு அங்கிருந்து மற்றொரு அறைக்கு சென்றுள்ளார்.

 

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகள் கிடப்பதாக கடையில் இருந்த பார்வதியிடமும் கணவரிடமும் தெரிவித்தனர். இதனால் அவர் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து வெளியே வந்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon