டெல்லியில் அரசு பள்ளிக்கு செல்லும் அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா
இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி டெல்லி வினோத் நகர் அரசு பள்ளியை பார்வையிட உள்ளார். இத்துணை பிரம்மாண்ட கட்டமைப்புகள் கொண்ட இது தனியார் பள்ளிக்கூடம் இல்லை. டெல்லி அரசாங்கத்தால் கட்டப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடம்.
அதிபரின் மனைவி மெலனியா வினோத் நகர்ப்பகுதியில் செயல்படக்கூடிய இந்த ராஜ்கிய சர்வோதயா பள்ளியை வரும் 25-ஆம் தேதி பார்வையிட உள்ளார். அங்கு மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மகிழ்ச்சி வகுப்பை பார்வையிடும் அவர் சுமார் ஒரு மணி நேரம் பள்ளி குழந்தைகளுடன் செலவிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 2,299 மாணவர்கள் இந்தப் பள்ளியில் பயில்கின்றனர். இவர்களுக்கு மொத்தம் 80 ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். இவர்கள்தான் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பள்ளியில் வேலை செய்து வருகின்றனர். இங்கு காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவிகளுக்கும், பிற்பகல் ஒரு மணி முதல் 5.30 மணி வரை மாணவர்களுக்கும் கல்வி கற்று தரப்படுகிறது. ஏசி வகுப்பறைகள், நீச்சல்குளம், சுத்தமான கழிப்பறையை தரம் உயர்ந்த விளையாட்டு உபகரணங்கள் வகுப்புகளில் எல்இடி பல்புகள் என பள்ளி முழுவதுமே நவீன வசதிகளால் ஜொலிக்கிறது.

இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த பள்ளியில் கட்டணமே கிடையாது என்பதுதான் கூடுதல் சிறப்பு. இங்கு பயிலும் மாணவர்களுக்கு மிகவும் எளிய முறையில் மகிழ்ச்சியாக நவீன உபகரணங்களுடன் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். ஏழை மாணவர்களுக்கு இத்தனை வசதிகளுடன் கட்டணமின்றி தரமான கல்வி கற்பது வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.
இதுபோன்று நவீன வசதிகளுடன் முறையான கல்வியை அனைத்து அரசு பள்ளிகளும் அளித்தால் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மனநிலையே பெற்றோர்களுக்கு ஏற்படாது என்பது மறுக்க முடியாத உண்மை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




