யோகிபாபுவிற்காக உருகும் நடிகை! மாமன் மச்சானா இருந்தால் நல்லா இருக்கும்!
ஒரு பெண் யோகி பாபுவின் படத்தை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இவர் திரைப்படத்தில் துணை நடிகையாக உள்ள சுஜி பிரதீபா. யோகி பாபுவின் தீவிர ரசிகரான இவர் டிக்டாக்கில் மூன்று லட்சம் பாலோயர்கள் உடன் வலம் வருகிறார்.
தனது டிக் டாக் பக்கத்தில் யோகிபாபுவை மையமாக வைத்து திரைப்பட பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு வீடியோவை வெளியிட்டு ஏராளமான ஹார்டின்களைக் குவித்து வருகிறார் சுஜி பிரதீபா. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வளர்ந்துள்ள யோகிபாபு பல தடைகளை தாண்டி உச்சம் தொட்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
யோகி பாபுவின் இந்த கடின உழைப்பால் ஈர்க்கப்பட்டு அவரது ரசிகையான சுஜி பிரதீபா அவரை காதலிப்பது போன்று திரைப்பட காதல் பாடல்களுக்கு தொடர்ச்சியாக டிக்டாக் வீடியோ வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த செய்தியை அறிந்த பிரதீபா அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் தனது சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு தமது ஆதங்கத்தை சுஜி பிரதீபா வெளிப்படுத்தினார். இப்படி தொடர்ச்சியாக வீடியோ வெளியிடுகிறீர்கள் உங்களுக்கு யோகிபாபுவை அவ்வளவு பிடிக்குமா என நமக்குள் எழும் கேள்வியை போல டிக் டாக் வாசிகளுக்கும் சந்தேகம் எழுந்து, அவரிடமே கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பிரதீபா விளக்கமளித்து வெளியிட்டுள்ள வீடியோவில் தமக்கு யோகிபாபுவை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். 16 வயதிலிருந்து சினிமா துறையில் இருக்கும் தமக்கு அதில் சாதிப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும் எனவே அவ்வளவு எளிதில் யாரையும் எடை போட்டு விடாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளார்.
யோகி பாபு தனக்கு மாமாவாகவோ, மச்சானாகவோ இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தனது விருப்பத்தை அந்த வீடியோவில் பிரதிபா வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு டிக்டாக்கில் யோகி பாபுவை நினைத்து உருகி தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டுவரும் சுஜி பிரதீபாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




