திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது மோதி 20 பேரை காவு வாங்கிய கன்டெய்னர் லாரியுன் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கேரள அரசின் சொகுசு பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 20 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஹேமராஜ் காயங்களின்றி உயிர் தப்பி விட்டார். விபத்து நடந்தவுடன் தப்பியோடி விட்டார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட எல்லையில் கன்டெய்னர் லாரி டிரைவர் ஹேமராஜை, திருப்பூர் போலீசார் கைது செய்தனர். விபத்தில் பலியான 20 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஹேமராஜும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.