--- --:--:-- --

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாது

9

இந்தியாவில் வரும் 24, 25 தேதிகளில் அமெரிக்க அதிபர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளிடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கூட்டுப்படை தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் இந்த பயணத்தின்போது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டாது என்று கூறினார்.

 

இந்தியாவுடன் அமெரிக்காவால் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றும் கூறிய ட்ரம்ப் அந்த ஒப்பந்தம் செய்து கொள்வதே தாம் ஒத்தி வைத்து இருப்பதாக குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் அந்த தேர்தலுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுமா என்பது தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

 

அமெரிக்கா- இந்தியா இடையேயான வர்த்தக உறவுகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி டிரம்ப் அமெரிக்காவை உரியமுறையில் இந்திய நடத்தவில்லை எனவும் கூறினார். அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமக்கு மிகவும் பிடித்தமானவர் என புகழ்ந்த அவர் இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து அமெரிக்கா சார்பில் ராபர்ட் என்பவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அவர் டிரம்ப்புடன் இந்தியா வரமாட்டார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon