ஜெயலலிதா பிறந்தநாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிப்பு
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதையொட்டி ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்விற்காக 5 புதிய திட்டங்களையும் அரசு செயல்படுத்த இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார் . அரசு இல்லங்களில் வாழும் ஆதரவற்ற குழந்தைகள் 21 வயதை நிறைவு செய்யும் போது அவர்களது பெயரில் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் வங்கிகளில் செலுத்தப்படும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




