பெண்காவலரை வீடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிட்ட சிறுவன்

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் அனுமதி இல்லாமல் பெண் காவலரை போனில் வீடியோ எடுத்து அதனை டிக்டாக்கில் வெளியிட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பகுதியில் கடந்த 16 ஆம் தேதி அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

 

இந்த போட்டிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் இருவர் பணியை முடித்துவிட்டு அந்த பகுதி வழியாக நடந்து சென்றபோது ஆள் தெரியாத மர்ம நபர் அவர்களை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வடிவேலு காமெடி உடன் சேர்த்து டிக்டாக்கில் அந்த நபர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து லால்குடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த வீடியோவை எடுத்தது வாடிப்பட்டியை சேர்ந்த சிறுவன் என்பதை கண்டறிந்து அவனை கைது செய்தனர்.


Leave a Reply