--- --:--:-- --

டெல்டா மாவட்டங்களை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கும் திட்டம்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்!!

டெல்டா மாவட்டங்களை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கும் திட்டம்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்!!

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை அனுமதிக்கக் கூடாது.டெல்டா பகுதியை பாதுகாக்க சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

 

இதையடுத்து சில தினங்களுக்கு முன், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தொடர்ந்து இதற்கு ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

 

இந்நிலையில், இன்று மாலை தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான கொள்கை முடிவு எடுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து தமிழக பட்ஜெட் மீதான விவாதத்தின் கடைசி நாளான நாளை, சட்டப்பேரவையில் சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான முக்கிய அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் எனத் தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon