தெலங்கானாவில் ட்ரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தீவிர ரசிகர்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை வைத்து வழிபட்டு வரும் தெலுங்கானாவை சேர்ந்த அவரது அதிதீவிர ரசிகர் ஒருவர் அவரை சந்திக்க உதவுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணபூசா.

 

டிரம்பின் அதிதீவிர ரசிகரான அவர் தனது வீட்டிற்கு அருகிலேயே அவருக்கு ஆறு அடியில் சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறார். டிரம்பின் நலனுக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

டிரம்பின் புகைப்படத்தை வணங்கி விட்டு எந்த ஒரு வேலையையும் தான் தொடங்குவதாக தெரிவித்த அவர் சிலையை பார்வையிட்டு தான் சந்திக்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply