வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்ட நிலையில் ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டும் தொடர்ந்து நடித்துக் கொடுத்து காட்சிகளை முடித்த பிறகே அஜித் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி ஒன்றில் நடிகர் அஜித் பைக் ஓட்டிய போது தடுமாறி கீழே விழுந்து கை, கால்களில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சுமார் 20 நிமிடங்கள் ஓய்வெடுத்த அஜித் மீண்டும் அந்த ஆக்ரோச சண்டைக் காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார். காயம் காரணமாக ஓய்வு எடுக்குமாறு இயக்குனர் வினோத் உள்ளிட்ட பட குழுவினர் கேட்டுக் கொண்டபோதும் காட்சிகளை நடித்துக் கொடுத்த பிறகே அஜித் பட்டதாக கூறப்படுகிறது.