--- --:--:-- --

கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற கொடூர தாய்! பழியை கணவர் மேல் போட்டு நாடகம்!

6

கேரளாவில் கள்ளக்காதலனுடன் வாழ 2 வயது குழந்தையின் தலையை பாறையில் மோதி கொடூரமாக கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். கொடுவள்ளியை சேர்ந்த பிரணவ், சரண்யா தம்பதிக்கு இரண்டு வயதில் வியான் என்ற குழந்தை இருந்தது.

 

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்த சரண்யாவுக்கு திருமணம் ஆகாத இளைஞருடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவருடன் சேர்ந்து வாழ விரும்பிய சரண்யா குழந்தையை கொலை செய்து விட்டு அந்தப் பழியை கணவர் மீது போட திட்டமிட்டார்.

இதற்காக பிரணவை சமாதானம் பேசி இரண்டு நாட்களுக்கு முன்பு வரவழைத்தார். பின்னர் இரவில் குழந்தையை பாறையில் மோதியும், கழுத்தை நெறித்துக் கொன்று கடற்கரையில் வீசிவிட்டு பிரணவ் மீது புகார் அளித்தார். இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி சரண்யாவை கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon