2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி
கன்னியாகுமரி மாவட்ட எல்லை அருகே பாரசாலை பகுதியில் இரண்டு தலையுடன் பிறந்த கன்று குட்டியை அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். அந்தப் பகுதியில் வசித்து வரும் பாஸ்கர் என்ற விவசாயி வளர்த்து வந்த பசு மாடு ஈன்ற குட்டிக்கு இரண்டு தலைகள், நான்கு கண்கள், இரண்டு நாக்கு உள்ளன. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கால்நடை பராமரிப்பு அதிகாரிகள் கன்றுக்குட்டி குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




