வைரலாகும் குட்டி பிளாட்டிபஸ் புகைப்படம்
உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு மிகச் சிறிய உருவம் கொண்ட பிளாட்டிபஸ் குட்டியின் புகைப்படம் வைரலாகிய நிலையில் அது சிற்பம் என்பது தெரியவந்துள்ளது. தாஸ்மானியா உட்பட கிழக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் பிளாடிபஸ் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பாலூட்டி விலங்காகும்.
இந்த நிலையில் மிகச்சிறிய பிளாட்டிபஸ் குட்டி ஒன்று உள்ளங்கைக்குள் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் டுவிட்டரில் வைரல் ஆனது. ஏராளமான லைக்குகளையும், ஷேர்களையும் பெற்ற இந்த புகைப்படத்தில் இருப்பது நிஜ பிளாட்டிபஸ் தானா என பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில் அது செர்பிய கலைஞர் வடிவமைத்த மிகச் சிறந்த சிற்பங்கள் என்பது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




