ரஷ்யாவின் தெற்கிலுள்ள பஸ்கைரியா பகுதியில் ஐஸ் கட்டிகள் நிறைந்த பள்ளம் ஒன்றில் சிக்கிக்கொண்ட 11 குதிரைகள் கயிறு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டன. அந்தப் பகுதியில் விவசாயிகள் சிலர் குதிரையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அவைகள் ஐஸ்கட்டிகள் நிறைந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டன.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக கயிறுகளை குதிரையின் கழுத்தில் வீசி பத்திரமாக மீட்டனர். பின்னர் பேசிய விவசாயிகள் அனைத்து குதிரைகளும் எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் குளிர்காலத்தில் ரஷ்யாவில் பயணம் செய்யும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் படியும் அறிவுறுத்தினர். ஐஸ் பள்ளத்திலிருந்து குதிரைகளை காப்பாற்றும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.