குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 5வது நாளாக தொடரும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐந்தாவது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இஸ்லாமிய மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாடல்கள் பாடி தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள சில கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




