கம்பத்தில் தாயே மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொலை!

கம்பம் அருகே முல்லைப் பெரியாறு தடுப்பணை அருகே உள்ள புதரில் இருந்து ஆண் ஒருவரின் தலை, கை கால்கள் இல்லாத நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் வந்து அந்த உடலை வீசி சென்றதை போலீசார் கண்டறிந்தனர்.

 

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் இரு சக்கர வாகனத்தில் வந்து வீசி சென்ற இருவரும் கம்பத்தை சேர்ந்த செல்வி, அவரது மகன் விஜயபாரதி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் வீசிச் சென்றது செல்வியின் மூத்த மகன் விக்னேஸ்வரன் உடல் என்கிற திடுக்கிடும் தகவல் வெளியானது.

மேலும் செல்வி அளித்த தகவலின்பேரில் விவசாய கிணறு ஒன்றிலிருந்து தலையை மீட்டனார். மற்றொரு விவசாய கிணற்றில் இருந்து விக்னேஸ்வரனின் கை-கால்களை இரண்டாவது நாளாக தேடிவருகிறார்கள். விசாரணையில் கோவையில் பொறியாளராக பணிபுரிந்த விக்னேஸ்வரனுக்கு திருமணமாகாத நிலையில், கடந்த வாரம் அவரது தம்பி விஜய பாரத்திற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

 

தம்பி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நிலையில் விக்னேஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவன் பணிக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாக இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தாயே தனது இளைய மகனுடன் சேர்ந்து மூத்த மகன் விக்னேஸ்வரனை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply