காதலித்துவிட்டு தப்ப முயன்ற காதலன்! திருமணம் செய்து வைத்த போலீசார்
காதலித்து ஏமாற்றி விட்டு வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற இளைஞரை பிடித்து காதலியுடன் போலீசார் திருமணம் செய்து வைத்தனர். சென்னை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்த கவிதா, கொடி சூளுரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை 4 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தன்னைப் பிரிந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக வெங்கடேஷ் மீது சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் வெங்கடேஷை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என இரு வீட்டார் சம்மதத்துடன் போலீசார் முடிவெடுத்து காவல்நிலையத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். இருவரிடமும் புகாரை திரும்பப் பெறுமாறு எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் ஆசிர்வாதம் செய்து தம்பதிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




