இன்ஸ்டாகிராமில் 5 கோடி பாலோவர்ஸை கொண்ட முதல் இந்தியர்…!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை முறியடித்து வரும் கோலிக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 5 கோடியாக உயர்ந்துள்ளது.

 

ஐந்து கோடி பேரை பின்தொடர்பவர்கள் கொண்ட முதல் இந்தியர் என்ற சிறப்பை கோலி பெற்றுள்ளார். இந்தியாவில் கோலிக்கு அடுத்தபடியாக பிரியங்கா சோப்ராவை 4 கோடியே 99 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.


Leave a Reply