--- --:--:-- --

தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை

17

நடிகை அமலாபால் அளித்த புகாரில் தொழிலதிபர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர் அழகேசன் என்பவர் தம்மிடம் ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் கடந்தாண்டு புகார் அளித்திருந்தார்.

 

அதை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை அவ்வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவன ஊழியரான பாஸ்கரை கைது செய்தது. அதை தொடர்ந்து இருவரும் பிணையில் வெளிவந்த நிலையில் அமலாபல் அளித்த புகாரின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 

இம்மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு காவல்துறை பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon