--- --:--:-- --

“சட்டம் ஒழுங்கை கவனிக்க போலீசுக்கு தெரியும்!!” சட்டசபை முற்றுகைக்கு தடை கோரும் வழக்கில் உயர் நீதி மன்றம் சாட்டையடி!!

16

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாளை சட்டசபை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி நடத்தப்படும் இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்டம் ஒழுங்கை காக்க போலீசுக்கு தெரியும் என நெத்தியடி கொடுத்துள்ளனர்.

 

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளன. கடந்த 14-ந் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய பேரணியில் போலீஸ் நடத்திய தடியடியைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் சிஏ ஏ-க்கு எதிராக நடப்பு சட்டப் பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றுள்ளன. இதன் ஒரு கட்டமாக நாளை சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. காவல்துறை அனுமதியின்றி இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெறுவதால், நாளைய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இந்த சட்டசபை முற்றுகைப் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வெடிக்கும். எனவே போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வாராகி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். சட்டம் ஒழுங்கை காப்பது, கையாள்வது எப்ப்டி என்பது காவல்துறைக்கு தெரியும்.நாளை நடைபெறும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான முற்றுகை போராட்டத்தை காவல்துறை கண்காணித்துக் கொள்ளும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுவை வழக்காக பட்டியலிட்ட பின்னரே விசாரிக்க முடியும் எனக் கூறி உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon