இராமநாதபுரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி,  தமிழ் புலிகள் கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் சேகர் , விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் முகமது யாசின், பெரியார் பேரவை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கலையரசன்,
ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் புவனேஸ் சமூக விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர்
தமிழ்வாணன் ஆகியோர் பேசினர்.

கேரளா , மேற்கு வங்கம் , பஞ்சாப் , ராஜஸ்தான், ஜார்கண்ட், புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழக அரசும் இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட 4 கோரிக்கைகள் கண்டன, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Leave a Reply