இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றங்கரை ஊராட்சியில் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் ஆலயம் நிழற்குடை திறப்பு விழா, தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி உபகரணங்கள்,குழந்தைகளுக்கு நாற்காலிகள் எனமகாராஜா நிதி உதவியில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு ஆற்றங்கரை ஊராட்சி துணைத்தலைவர் ஏ.நூருல் அஃபான் தலைமை வகித்தார். மண்டபம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் நிழற்குடையை திறந்து வைத்தார்.ஊராட்சி செயலாளர் எம்.ராஜாமணிநன்றி கூறினார்.
மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.சி. ஜீவானந்தம், முஸ்லிம் ஜமாத் செயலர் இஜிபுக்கான், ஐக்கிய ஜமாத் முன்னாள்நிர்வாகி தஸ்தகீர், ஜமாத் பொருளாளர் ரியாஸ், துணைத் தலைவர் அப்துல் முனாப், தமுமுக கிளை பொருளாளர் மன்சூர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அஹ்மத் அலி, திமுக நிர்வாகிகள் நாகராஜ், அபுல், இந்து சமூக நிர்வாகி பக்கீர் தேவர், ராமச்சந்திரன், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வமணி உட்பட தமுமுக, இஸ்லாமிய வாலிபர் சங்கம், எஸ்டிபிஐ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.