டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு..! மேஜிக் பேனா சப்ளை செய்தவர் சிக்கினார்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேட்டில் எழுதிய ஓரிரு மணி நேரத்தில் மை அழியக்கூடிய I மேஜிக் பேனாவை சப்ளை செய்த அசோக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் பெருமளவு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் இந்த முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு சிபிசிஐடி பிரிவு போலீஸ் விசாரணை நடத்திவருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டு ரேங்க் பட்டியலில் இடம் பிடித்த 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின்போது விடைத்தாளில் பதில் எழுதிய ஓரிரு மணிநேரத்தில் மை அழியக்கூடிய மேஜிக் பேனா பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த முறைகேட்டின் சூத்திரதாரிகளாக இருந்த காவலர் சித்தாண்டி, இடைத்தரகர் ஜெயக்குமார் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், இந்த மேஜிக் பேனாவை சப்ளை செய்தது சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அசோக் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சிபிசி வடி போலீசார் இன்று அசோக்கை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதனால் மேஜிக் பேனா தயாரித்தது எப்படி? இதற்கு ஐடியா கொடுத்தது யார்? அசோக்குக்கு யார்? யார்? உதவினார்கள் என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் விசாரணையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply