கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள நாயக்கன் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது.இந்த பகுதியில் இன்று காலை அந்த வழியாக சென்ற மர்ம நபர்கள் புகைபிடித்து விட்டு நெருப்புடன் வீசிச்சென்றுள்ளனர்.இதில் கண்ணன் என்பவரது பண்ணை வீட்டின் அருகே தீ பற்றியுள்ளது.காற்றின் வேகம் காரணமாக லேசாக பற்றிய தீ மளமேவென பற்றி எரியத்தொடங்கியது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பெரியநாயக்கன் பாளையம் தீயணைப்புத்துறையிறருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இலை,தழைகளை கொண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயினை அணைத்தனர்.இருப்பினும் ஒரு ஏக்கருக்கும் மேலாக காய்ந்த புற்கள் கருகி விட்டன.
இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் கூறுகையில் இப்பகுதி வனப்பகுதியை ஒட்டி இருப்பதாலும், சுட்டெரிக்கும் வெயிலினாலும் இலேசாக பற்றிய தீ மளமளவென பற்றியுள்ளது.பொதுமக்கள் இது போன்று வனப்பகுதியினை ஒட்டியுள்ள பகுதிகளில் செல்லும் பொழுது காட்டுத்தீ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.