சேலம்-நாமக்கல் ரோட்டில் சாலை மறியல்
சேலத்தில் இருந்து நாமக்கல், திருச்சி செல்லும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள், நடுவில் இருக்கும் சிறிய ஊர்களில் பஸ் ஸ்டாப்பில் பேருந்து நிற்குமா என்று கேட்டால் அவர்கள் பேருந்தில் ஏற அனுமதிப்பதில்லை. இதனால் பேருந்துக்கு நீண்ட நேரமாக பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்த ஒரு பேருந்தும், பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பொழுது நடுவில் இருக்கும் சிறிய ஊர்களில் நிற்காது என்று பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் ஓட்டுனரும் நடத்துனரும் விரட்டி அடிக்கின்றனர்.அதனால் இன்று காலை சேலம்-நாமக்கல் ரோட்டில் மல்லூரில் இனிமேல் பேருந்து நிற்க வேண்டும் என்று 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது சம்பந்தமாக ,உரிய அதிகாரிகளிடம் தெறுவிக்கப்பட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




