சுதந்திர வெளிச்சங்கள் அமைப்பு சார்பில் தமிழருவி மணியனின் ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம் என்ற நூல் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனியார் உணவக சங்க துணைத்தலைவர் சீனிவாசன் தலைமையில் காந்திய மக்கள் இயக்க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தேவராஜன் வரவேற்புரையில் இந்நூலை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் நூலை வெளியிட்டார்.
நூல் வெளியீட்டுக்கு பின் பேசிய தமிழருவி மணியன் ஒவ்வொருக்கும் சில கடமைகள் உண்டு,அந்த கடமையை தவறாது செய்யும் போது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.அதேசமயம் சமூகத்தின் மேம்பாட்டுக்கு நமது பங்களிப்பு என்ன என்பது தான் முக்கியமானது.
மேலும்,ஒவ்வொருவரும் சக மனிதர் குறித்து சிந்திக்க கூடிய உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும்.அதுதான் உனது வாழ்வின் அடையாளம் என்றும், அன்பை காட்டிலும் சிறந்த தவம் ஏதுமில்லை,அன்பை காட்டிலும் மிக உயர்ந்தது உலகில் வேறு எதுவும் இல்லை என்றார்.நதியைப் போல மனித வாழ்க்கையும் இரண்டு கதைகளுக்கும் உட்பட்டுதான் இருக்கிறது என பேசினார்.
மேலும்,நாம் பிறந்த முதலிலேயே பெற்றோர் மற்றும் மற்றவர்களும் இருந்து ஏதாவது பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றோம்.சாகும் வரையில் அடுத்தவரிடம் இருந்து பெற்றுக் கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை.அதேசமயம் மற்றவர்களுக்கு கொடுத்து பழக வேண்டும்.பெறுவதும் தருவதும் தான் மனித வாழ்வின் இரண்டு கூறுகளாக உள்ளன என்றார்.இவ்விழாவில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, காந்திய மக்கள் இயக்க மாநில துணைத்தலைவர் டென்னிஸ் கோவில் பிள்ளை,எழுத்தாளர் கோவை ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.