திண்டுக்கல்லில் மாநகராட்சி அரசு பள்ளி கழிவறைகளை மாணவிகளே சுத்தம் செய்ய புகைப்படம் இணையதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாகல் நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு உள்ள கழிப்பறைகளை பள்ளிச்சீருடையில் மாணவிகள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பள்ளி கழிவறைகளை மாணவ, மாணவிகளை வைத்து சுத்தம் செய்யக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இப்புகைப்படம் பல்வேறு தரப்பினருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்திய ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும் செய்திகள் :
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு : செல்வப்பெருந்தகை
மகாத்மா காந்தியை திருமாவளவன் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார் : தமிழிசை
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சோக சம்பவம்..!
நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவிப்பு..!
நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மீது புகார்..!
திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!