--- --:--:-- --

ரஜினி மலை, அஜித் தல..ரைமிங்கா பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

14.1

நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகர் விஜய் நிகரானவர் அல்ல என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடக்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக பட்ஜெட் யாரையும் பாதிக்காத முத்தான பட்ஜெட் என்று கூறினார். நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். ரஜினி மலை அஜித் தல என்று கூறியவர் நடிகர் விஜய் ரஜினிக்கு நிகரானவர் அல்ல என்றும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon