மகளிர் T20 உலகக் கோப்பையை விளம்பரப்படுத்தும் நடிகர் சிவகார்த்திகேயன்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டை விளம்பரப்படுத்தும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் உரையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 21-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.
இத்தொடரை விளம்பரப்படுத்த முடிவெடுத்த சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரக குழு கனா என்ற பெண்கள் கிரிக்கெட் பற்றிய படத்தை தயாரித்து நடித்த நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டுக்கு சிவகார்த்திகேயன் ஆதரவு கூறும் வீடியோவையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




