10 வயது சிறுவன் ஜீரோ டிகிரி கோல் அடிக்கும் வீடியோ வைரல்!
கேரளாவில் 10 வயது சிறுவன் ஒருவன் கால்பந்து போட்டியில் ஜீரோ டிகிரி பரிமாணத்தில் கோல் அடித்து அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது. சிறுவனின் தாயார் பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவை இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரர், ஐ எம் விஜயன் ட்விட்டரில் மீண்டும் வெளியிட்டுள்ளார்.
அதில் சிறுவன் மைதானத்தில் ஒரு மூலையிலிருந்து ஜீரோ டிகிரி பரிமாணத்தில் கோல் அடித்துவிட்டு மகிழ்ச்சியில் ஓடிச் செல்லும் காட்சிகள் உள்ளன. ஒரு மூலையிலிருந்து ஜீரோ டிகிரி பரிமாணத்தில் கார்னர் கிக் கோல் போடுவது கடினமாகும். அந்த கோலை 10 வயது சிறுவன் மிக எளிதில் அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




