புதிய வகை போதை பொருள் விற்ற கும்பல் கைது
கோவையில் பார்ட்டி நடத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய வகை போதைப்பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கேரளாவை சேர்ந்த மேலும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு எல்எஸ்டி எனப்படும் போதை மருந்து தடவிய ஸ்டாம்ப் மற்றும் கல்வம் வடிவிலான போதை மருந்து ஆகிய புதிய வகை போதை பொருட்கள் விற்பனை செய்த கும்பல் பிடிபட்டது. இதன் தொடர்ச்சியாக மயிலேரிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் எனக்கூறி தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த பில்ஜூலால், அர்ஜுன் பிரசாத், சாராங் ஆகிய மூன்று நபர்களை போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து எல் எஸ் டி அட்டை, போதை மருந்து, ஒன்றே கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




