--- --:--:-- --

செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை

2

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

 

அம்பாசமுத்திரத்தில் அடுத்த கல்லிடைக்குறிச்சியில் செவிலியர் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்தார். கணவர் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாலும், மகன் கோயம்புத்தூரில் படித்து வந்தாலும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 

இதனை நோட்டமிட்ட ஒரு கும்பல் 2008 ஆம் ஆண்டு செவிலியர் வாயில் துணியை வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு அப்போதைய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது.

 

இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் டிஎன்ஏ சோதனை மூலம் கல்லிடைகுறிச்சி ராஜேஷ், அயன் சிங்கம்பட்டி வசந்தகுமார் ஆகிய இருவர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருநெல்வேலி மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி இரண்டு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்த தோடு மற்ற நால்வரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon